Trust = LIC OF INDIA

Trust = LIC OF INDIA

ஞாயிறு, 21 அக்டோபர், 2018

Griha Arjan. Pension Reverse Mortgage

LIC Housing Finance Ltd., has a scheme called for "Griha Arjan" for Senior Citizens. The objective of the scheme is to provide a source of additional income to the resident Senior Citizens, above 60 years, who own self-acquired and self- occupied House property in India. The purpose of the loan is to supplement their income for any personal expense, house repairs, to pay any existing liability, etc. The borrower can be single or co-borrower with his spouse. The property should be free from encumbrance i.e. the borrower should be having a clear, and marketable title in his name. The residual life of the property should be at least 20 years.

The Reverse Mortgage loan will be secured by way of registered mortgage of the residential property. The term under this scheme is maximum 15 years. The upfront fees will be 1% of the loan amount. The maximum loan amount shall be restricted to Rs.50lakhs. The minimum loan amount will1 be Rs1.0lakhs. The loan can be availed through monthly payments / lump sum payments / combination of both. The maximum loan balance would be restricted to 90% of the value of Property at any point of time during loan tenure. Loan balance would include interest till maturity. The loan amount will depend upon value of property, age of the borrower, rate of interest etc. Initial valuation of the property would be done to determine the loan amount and subsequent revaluations will be done at intervals of5 years.

The Company shall have the option to revise the periodic / lump sum amount every 5 years. If the borrower does not accept the revised terms, no further payments will be effected by the company. Interest at the rate agreed before the review will continue to accrue on the outstanding amount of loan. The loan shall become due and payable only when the last surviving borrower dies or opts to Sell The Home, or permanently moves out of the home which is mortgaged. In case the borrower moves out of the residence, he/she will be required to inform LICHFL. The loan shall be liable for foreclosure due to occurrence of the following events:

a) If the borrower(s) has/have not stayed in the property for a continuous period of one year;

b) If the borrower(s) fail(s) to pay property taxes or maintains and repair the residential property or fail(s) to keep the home insured. The LICHFL reserves the right to realize the amount due by bringing the property to sale and utilizing the sale proceeds to meet the outstanding balance of principal and interest;

c) If the borrower(s) declares himself / herself bankrupt;.

d)If the residential property mortgaged is donated or abandoned by the borrower(s);

e)If the borrower(s) effects changes in the residential property that affect the security of the loan.

f) Due to perpetration of fraud or misrepresentation by the borrower( s);

g) If the government under statutory provisions, acquires the residential property for public use;

h) If the government condemns the residential property;

i) If the borrowers do not accept the revised terms on revaluation of the property and interest reset at the end of every 5 years of sanction;

j) If there is any violation of terms and conditions of REVERSE MORTGAGE LOAN.

The settlement of the dues (loan along with accumulated interest) would be either met by sale proceeds of the mortgaged residential property or through repayment by borrower and his legal heir. The borrower(s) or his / her / their Legal Heirs / estate shall be provided with the first right to settle the loan along with accumulated interest. The balance surplus remaining after settlement of loan along with accumulated interest, through sales proceeds would be passed on to the borrower or his legal heirs. The borrowers will be required to submit Annual Survival Certificates in the month of November every year, which includes clauses regarding marital status and permanent residence of the borrowers. A list of legal heirs will be obtained at the time of sanction of loan and specific instructions of loan and about inheritance of the property and payment of balance amount, if any, from out of the sale proceeds. The borrower will have the option to repay the loan at any time during loan tenure. There will be no prepayment penalty.

The house property will be insured by the borrower at his cost against fire, earthquake and other calamities. The borrower shall ensure that payment of all the taxes, charges etc. LICHFL reserves the right to pay insurance premium, taxes, charges etc by reducing the loan amount to that extent. The borrower shall maintain the property in good condition.

After the documents have been executed and loan transaction finalized, the Senior Citizen shall be given up to 15 days time to cancel the transaction, for any reason what so-ever. If the loan has been disbursed the entire loan amount will need to be paid by the Senior Citizen borrower within this period.

திங்கள், 1 அக்டோபர், 2018

அங்கீகாரமற்ற மனைகளை பதிவு செய்வது எப்படி? புதிய விதிகள் சொல்வதென்ன? முழு விவரம்

அங்கீகாரமற்ற மனைகளை பதிவு செய்வது எப்படி? புதிய விதிகள் சொல்வதென்ன? முழு விவரம்

சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர், அங்கீகாரமில்லாமனைகளைப் பத்திரப் பதிவு செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி பத்திரப்பதிவு செய்யவும், அங்கீகாரமில்லாத மனைகளைப் பத்திரப்பதிவு செய்யவும், 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி தடை விதித்தது.

இதை எதிர்த்து மனை உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கு உயர்நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் வீட்டு மனைகள் பத்திரப் பதிவு தொடர்பாக உயர்நீதி மன்றத்திடம் தமிழக அரசு சந்தேகங்களை எழுப்பியது. அதற்குப் பதிலளித்த உயர்நீதி மன்றம், '20-10-2016 ஆம் ஆண்டுக்குமுன் பத்திரப் பதிவு செய்த மனைகள் மறு பதிவு செய்து கொள்ளலாம். அரசு நிர்ணயித்த கட்டணங்களை செலுத்தி மனைகள் கட்டிக்கொள்ளலாம். பத்திரப் பதிவுத் தடை அமலிலிருந்த காலத்தில் பதிவு செய்த வீட்டுமனைகள் செல்லாது' என்றும் விளக்கமளித்தது.
முந்தைய கட்டுரை:  வீட்டு மனை பத்திரப் பதிவுக்கு புதிய அரசாணை! முழு விபரம்

இதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில், பாதிக்கப்பட்ட பலரும் வேண்டிக் கொண்டதற்கிணங்க தற்காலிகத் தலைமை நீதிபதி ஹூலுவாடி ரமேஷ் தலைமையிலான முதன்மை அமர்வு, வீட்டு மனைகளாகப் பதிவு செய்யப்பட்ட மனைகளை மீண்டும் பதிவு செய்ய விதிக்கப்பட்டிருந்தத் தடையை கடந்த மார்ச் மாதத்தில் நீக்கியது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுக்க பல ஆயிரம் வீட்டுமனைகள் விறுவிறுப்பாக மறுவிற்பனையாகத் தொடங்கின.

அடுத்து பதவியேற்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு, இந்தத் தடையை மீண்டும் கொண்டுவந்து, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனை எதிர்பாராத தமிழக அரசாங்கம் வேறு வழி இல்லாமல் அடுத்த ஒரு சில தினங்களில், அரசு அங்கீகாரம் பெறாத மனைப்பிரிவுகள் மற்றும் தனிமனைகளை வரைமுறைப்படுத்துவதற்கான விதிமுறைகள் அடங்கிய அரசாணையை 4.5.2017 அன்று வெளியிட்டு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதனை அடுத்து முதன்மை அமர்வு 12.5.2017 அன்று அரசின் வரன்முறைத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு, நகரமைப்பு விதிகள் மற்றும் புதிய வரன்முறை விதிகளின்படி, பதிவுச் சட்டம் பிரிவு 22ஏ-யையும் அதன் சலுகையையும் செயல்படுத்துமாறு இடைக்காலத் தீர்ப்பு ஒன்றினை வழங்கியது.

விதிகள் சொல்வதென்ன...

தமிழ்நாடு அங்கீகாரமற்ற வீட்டுமனைகள் ஒழுங்கு முறை விதி -2017
(Tamil Nadu Regularisation of Unapproved Layouts and Plots Rules, 2017)

விதி 1 - தமிழ்நாடு அங்கீகாரமற்ற மனைப்பிரிவுகள் (ம) மனைகளை முறைப்படுத்தும் விதி

விதி 2 - வரையறைகள்

1. நகர் ஊரமைப்பு சட்டம் 1971 (தமிழ்நாடு சட்டம் 1922 பிரிவு 35)

2. i) முறைப்படுத்தும் அதிகாரிகள் (மனைகள், மனைப்பிரிவுகள் (மற்றும்) மனை உட்பிரிவுகள்)

a) ஆணையாளர், மாநகராட்சிகள்
b) ஆணையாளர், நகராட்சிகள்
c) செயல் அலுவலர், பேரூராட்சிகள்
d) வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி ஒன்றியம்

ii) மனைப்பிரிவுகளை முறைப்படுத்துதல்

a) உறுப்பினர் செயலர், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA)
b) உறுப்பினர் செயலர், உள்ளூர் திட்டக்குழுமம், பல்கலை நகர் புதுநகர் வளர்ச்சிக் குழுமம். மண்டல துணை இயக்குநர்/உதவி இயக்குநர். நகர் ஊரமைப்பு துறை

3. வளர்ச்சிக் கட்டணம் விதி எண் 10-ல் கண்டுள்ளவாறு வளர்ச்சிக் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.

4. வளர்ச்சி கட்டுப்பாட்டு வரையறைகள் வரையறைகளின்படி  முறைப்படுத்துதல்

5. வளர்ச்சித் திட்டங்கள், முழுமைத் திட்டம், மண்டலத் திட்டம், புதுநகர் வளர்ச்சித் திட்டம், விரிவு அபிவிருத்தி திட்டம், நகரமைப்பு திட்டம்,

6. வளர்ச்சி வரையறுகள் சென்னை (CMDA Area)

7. வழிகாட்டும் மதிப்பீடு

31.3.2012 வரை பதிவு செய்யப்பட்ட மனைகளுக்கு 1.8.2007-ல் பதிவுத் துறையில் குறிப்பிடப்பட்ட வழிகாட்டும் மதிப்பீடு வசூலிக்கப்பட வேண்டும். 1.4.2012-க்கு பின்னர் பதிவு செய்யப்பட்ட மனைகளுக்கு, இவ்விபரங்களை அரசிதழில் வெளியிடப்பட்ட 04.05.2017 அன்று பதிவுத்துறையில் குறிப்பிடப்பட்ட வழிகாட்டு மதிப்பீட்டின்படி வசூலிக்கப்பட வேண்டும். மனைப்பிரிவில் விற்பனை செய்யப்படாத மனைகளுக்கு இத்துறையில் மனைப்பிரிவுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் நாளைய வழிகாட்டும் மதிப்பினை வசூலிக்கப்பட வேண்டும்.

8. மனைப்பிரிவு (Layout)

8. (i). 8 மனைகளுக்கு கூடுதலாக பிரிக்கப்படும் மனைகள் CMDA Area
    (ii). புதிய சாலைகள், தெருக்கள் அமைத்து மனைகளாக பிரிக்கப்பட்டிருப்பின் -
    உள்ளூர் திட்டக் குழுமம்/ மண்டல நகர் ஊரமைப்பு பகுதி

9. மனைப்பிரிவு கட்டமைப்பு (Layout framework)

மனையிடத்தில் அமைக்கப்பட்டுள்ளவாறு ஏற்கனவே அமையப்பெற்ற மனைப்பிரிவில் தேவையான மாற்றங்களை செய்து மேம்படுத்துதல் (விதி 5(4) ன் படி)

10 மனைப்பிரிவு உரிமையாளர் - மனைப்பிரிவின் உரிமையாளர் (Layout Promoter) - அதிகாரம் பெற்றவர் - கூட்டுறவு பதிவாளர் (ம) மனைப்பிரிவு உரிமையாளர் சங்கம்

11. உள்ளூர் நிர்வாகம் (Local Authority) - அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராம ஊராட்சி

12.  02.01.02016-க்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தின் படி மனையிடத்தின் உரிமையாளர் (Plot holder)

13. மனை அல்லது அனுமதியற்ற மனை, அனுமதியற்ற மனைப்பிரிவில் அமையும் உட்பிரிவுகள்

14. முறைப்படுத்துவதற்குரிய கட்டணம் (Regularisation charge) விதி 9-ன் படி அனுமதியற்ற மனை (அ) அனுமதியற்ற உட்பிரிவுகளை முறைப்படுத்துவதற்கு உரிய கட்டணம் வசூல் செய்தல்

15. அனுமதியற்ற மனைப்பிரிவுகளை முறைப்படுத்துதல் (Regularisation of unapproved layout) - அனுமதியற்ற மனைப்பிரிவுகளை முறைப்படுத்தினாலும் மனைப்பிரிவில் உள்ள ஒவ்வொரு மனைகளும்  முறைப்படுத்தப்பட்டதாக கருத இயலாது. அனுமதியற்ற மனைப் பிரிவுகளை முறைப்படுத்திய பின்னர் அதிலுள்ள ஒவ்வொரு மனைகளும் முறைப்படுத்தப்படல் வேண்டும்.

16. மனை உட்பிரிவு (Sub-division )

i. ஒரு நிலத்தினை 8 மனைகள் வரை உட்பிரிவு செய்தல் - CMDA Area
ii. புதிய சாலைகள் ஏதும் ஏற்படுத்தாமல் நிலையிலுள்ள சாலையின் மீது அமையும் நிலத்தினை மனைப்பிரிவுகளாக உட்பிரிவு செய்தல் - DTCP Area

17. அனுமதியற்ற மனைப்பிரிவு அல்லது மனை உட்பிரிவுகள் (Unapproved layout or sub-division) - நகர் ஊரமைப்பு துறையில் முன் ஒப்புதல் பெறப்படாமல் பிரிக்கப்பட்ட மனைகள் (ம) மனை உட்பிரிவுகள்

18. விடுபட்ட வெளிப்பாடுகள் அனைத்தும் நகர் ஊரமைப்பு சட்டம் 1971-ல் (தமிழ்நாடு சட்டம் 1972 பிரிவு 35) Tamil Nadu Town and Country Planning Act, 1971 (Tamil Nadu Act 35 of 1972) அமையும் வெளிப்பாடுகள்.

விதி 3 - அனுமதியற்ற மனைப்பிரிவினை முறைப்படுத்துவதற்கான காலக்கெடு (Cut-off date for considering regularisation of unapproved plots and layouts)

2.01.02016-க்கு முன்னர் மனைகள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதே போல் 2.01.016 அல்லது அதற்கு முன்னர் பதிவுத் துறையின் வழியாக விற்கப்பட்ட (ம) விற்கப்படாத மனைகள் அனைத்தும் (ம) உட்பிரிவு செய்யப்பட்ட மனைகள் அனைத்தும் முறைப்படுத்துவதற்கு தகுதியானதாகும். அதற்கு மனையின் உரிமையாளர் அல்லது ஒப்பந்தகாரர் மனையிடத்திற்கான விற்பனை பத்திரம் அல்லது title பத்திரம் தேவைப்படும். பொது அதிகாரம் (ம) ஒப்பந்த பத்திரம் மனை விற்பனை செய்வதற்கு அத்தாட்சியாக எடுத்துக் கொள்ள இயலாது.

விதி 4 - அனுமதியற்ற மனை (ம) மனைப்பிரிவுகளை முறைப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் (Restrictions for regularization of unapproved plots and layouts)

i. நீர்நிலைகள் மீது (வாய்க்கால், தொட்டி, ஏரி, குளம், ஆறு) ஆகியவற்றின் மீது அமைக்கப்பட்ட மனைப்பிரிவுகள்

ii. அரசு புறம்போக்கு நிலத்தின் மீது அமையப்பட்டுள்ள மனைப்பிரிவுகள்

iii. திறந்த வெளி ஒதுக்கீடு இடங்கள் (Open space reservation(OSR), பூங்கா, விளையாடுமிடங்கள் அமையப்பெற்ற மனைப்பிரிவுகள், அனுமதி பெறப்பட்ட மனைப்பிரிவில் திறந்த வெளி ஒதுக்கீடு இடங்கள், பூங்கா, விளையாடுமிடங்கள் ஒதுக்கீடுகளில் பிரிக்கப்பட்ட மனைகள்

iv. அடுத்த நிலத்திற்கு வழியாக அமையும் காலிமனை (Vacant Plot)

v. உத்தேச சாலை மீது அமையப்பெற்ற மனைகள். rail corridors (ம) தெருக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் அமையும் மனைகள்

vi. பொதுப்பாதை (ம) தெருக்களை ஆக்கிரமிப்பு செய்து பிரிக்கப்பட்ட மனைகள் நில உச்ச வரம்பு சட்டம் 1978 பிரிவு 24-ன் படி உள்ள மனையிடம்

vii. அதிக உயர் அழுத்தம் மின் பாதைக்கு கீழ் பிரிக்கப்பட்ட மனைகள்

விதி 5 - முறைப்படுத்துவதற்கான கட்டாய விண்ணப்பம் (Compulsory application for regularization)

i. மனைகளை முறைப்படுத்துவதற்கு உரிய அலுவலருக்கு விதி 3-ன் படி கணினியில் இணையதளம் வழியாக படிவம் 1 உரிய இணைப்புகளுடன் விண்ணப்பம் ஒவ்வொரு மனை உரிமையாளர் மற்றும் மனைப்பிரிவு விற்பனையாளர் செய்ய வேண்டும். உரிய அலுவலர் விண்ணப்பத்தினை பரிசீலினை செய்து உரிய ஆணை பிறப்பிப்பார்.

Lay out frame work முறைப்படுத்தப்பட்ட பின்னரே அதிலுள்ள தனித்தனி மனைகள் முறைப்படுத்த இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தனித்தனி மனை உரிமையாளர் முறைப்படுத்துவதற்கு மனைப்பிரிவின் வரைபடத்துடன் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ii. முறைப்படுத்தப்பட்டுள்ள விண்ணப்பத்தினை மனைப்பிரிவு உரிமையாளர்கள் பதிவு செய்யப்பட்ட கூட்டுறவு சங்கம், 3-ல் 2 பங்கு விற்பனையாகி இருந்தால் மனைப்பிரிவு உரிமையாளர்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

iii. அனுமதியற்ற மனைப்பிரிவை முறைப்படுத்துவதற்கு இந்த அறிக்கை (notification) ஆன தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் விதி 2(2)ii-ன்படி உரிய அலுவலர்களை தொடர்பு கொண்டு, விதி 2(2)ii-ன் படி அனுமதியற்ற மனைப்பிரிவு அமையப்பெற்ற கிராமம், சர்வே எண் அல்லது வார்டு எண், ந.அ.எண், உள்ளாட்சி பெயர் ஆகியவற்றினை குறிப்பிடுதல் வேண்டும்.

iv.  சம்பந்தப்பட்ட அலுவலர் விதி 2(2)ii-ன்படி தன்னிச்சையாக (suo-motu) தயாரித்து ஏற்கனவே நிலையிலுள்ள மனைப்பிரிவிற்கு அனுமதி வழங்க லைசன்ஸ் சர்வேயர் மூலம் விதி 2(2)i-ன் படி விபரங்கள் எடுக்க வேண்டும் மற்றும் முறைப்படுத்தாத மனைப்பிரிவுகளும் கண்டறியப்பட வேண்டும்.

v. மனைப்பிரிவு விற்பனையாளர் - பதிவு பெற்ற கூட்டுறவு சமுதாயம் – சங்கம் மனைப்பிரிவை முறைப்படுத்துவதற்கு சேர்ந்தே விண்ணப்பம் செய்ய வேண்டும் மற்றும் உரிய அலுவலரின் ஆணைப்படி பல வழிகளில் முறைப்படுத்தாத மனைப்பிரிவிற்கான விளைவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் மற்றும் தேவையான கட்டணம் விதிகளில் குறிப்பிட்டபடி செலுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

vi. விதி 2(2)i-ன்படி உரிய அலுவலரால் அனுமதியற்ற மனைப்பிரிவு மனைகள் முறைப்படுத்துவதற்கு விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்.

vii. விதி 2(2)ii-ன் படி அனுமதியற்ற மனைப்பிரிவு முறைப்படுத்துவதற்கு விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்.

viii. நில உரிமையாளர்கள் அல்லாதவர்களால் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும்.

xi.  விண்ணப்பம் கீழ்கண்ட இணைப்புகளை கொண்டிருக்க வேண்டும்.

a) உட்பிரிவு அல்லது மனைப்பிரிவில் உள்ள அனுமதியற்ற தனித்தனி மனைகளை முறைப்படுத்துவதற்கான இணைப்புகள் பட்டா அல்லது புலவரைபடத்தின்படி

i. எல்லை அளவுகள் குறிப்பிடப்பட்ட மனை அல்லது உட்பிரிவு  காட்டப்பட்ட இடஅமைப்பு வரைபடத்தின்படி 3 நகல்கள் மற்றும் சாலையின் அகலம் குறித்து வரைபடத்தில் மனுதாரரால் சுயகையொப்பம் இடப்பட்டும் லைசன்ஸ் சர்வேயர் அல்லது அது சம்பந்தமான சட்டத்தில் அல்லது கட்டிட விதியின்படி சான்றொப்பம் பெறப்பட்ட வரைபடத்தின் நகல்.

ii. உத்தேச மனை இடம் பெற்ற மனைப்பிரிவு வரைபடத்தில் மனையின் அளவுகள், சாலையின் அமைப்பு, சாலையின் அகலம், பொது திறவிட இடத்தின் அளவுகள் மற்றும் பொது உபயோக மனை ஆகியவையும் சர்வே எண்களும் கிராமம் குறிப்பிடப்பட்டு பெறப்பட வேண்டும்.

iii. மனைப்பிரிவு குறிப்பிடப்பட்டு அதை சுற்றி பொது உபயோக சாலையை இணைக்கும் பாதையையும் சுற்றியுள்ள அபிவிருத்திகள் குறிப்பிட்டு சுற்றுச்சார்பு வரைபடம் பெறப்பட வேண்டும்.

iv. மனையிடத்தின் சுயசான்றொப்பமிட்ட கிரைய பத்திரம் அல்லது டைட்டில் பத்திரத்தின் நகல்.

v. பட்டா. PLR (or) TSLR ஆகியவை மனுதாரர் பெயரில் பெறப்பட்டதன் நகல் மேற்கண்டவை மனுதாரர் பெயரில் இல்லையென்றால் முந்தைய உரிமையாளர்களின் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும்.

vi. விண்ணப்பம் செய்யப்படும் நாள் முன் ஒருவார காலத்திற்கு முன் வரை சார்பதிவாளர் துறையில் வில்லங்க சான்று பெறப்பட வேண்டும்.

vii. உத்தேச மனையிடம் விவசாயப் பகுதிக்குள் அமைந்தால் சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் நீர்வழிப்போக்குவரத்து. வெள்ளப்பாதிப்பு குறித்து சான்று பெறப்பட வேண்டும்.

a)  அங்கீகாரமற்ற வீட்டுமனைகள் ஒழுங்கு முறைபடுத்துதல் (For regularisation of unapproved layout )

i. விற்பனை செய்யப்பட்ட மனைகள் விபரத்துடன் மனைப்பிரிவு வரைபடம் தயாரித்து 5 நகல்கள்

ii. 500 மீட்டர் சுற்றளவிற்குள் அணுகுசாலை விபரம் மற்றும் அபிவிருத்திகள் குறிப்பிட்டு பெறப்பட வேண்டும்.

iii. வில்லங்க சான்று - மனைப்பிரிவு பிரிக்கப்பட்டு விற்பனை செய்த நாளிலிருந்து விண்ணப்பம் செய்யப்படும் ஒருவார காலத்திற்கு முன்வரை பெறப்பட வேண்டும்.

iv. மனைப்பிரிவு அமையவுள்ள, சுய சான்றிட்ட  உரிமையாளர் பெயரிலுள்ள நில உடைமை ஆவண நகல்

v. சமீபத்திய நிரந்தர நில உடைமை பதிவேடு Permanent Land Records (PLR) நகர நில அளவை பதிவேடு or Town Survey Land Records (TSLR) மற்றும் புலச்சுவடி Field Measurement Book (FMB)

c) நில உச்ச வரம்பு சட்டம். நில சீர்திருத்த சட்டத்தின்படி படிவம் -II நிரப்பப்பட்டு பெறப்பட வேண்டும்.

d) மனைப்பிரிவு விற்பனை உரிமையாளர் - சமுதாயம் - சங்கம் ரூ.20 முத்திரைத் தாளில் படிவம் III-ல் உரிய கட்டணம் செலுத்துவேன் என்றும் திருத்தம் (Rectification)   வேலை செய்ய வேண்டும் என உறுதிமொழி பத்திரம்.

விதி 6 - விண்ணப்பம் கீழ்க்கண்ட விபரங்களை நிறைவு செய்தல் வேண்டும். An application under these rules shall be in conformity with the following, namely

1) விமானச் சட்டம், 1934 (Aircraft Act, 1934)-ன் படி சுற்றுலா மற்றும் விமான அமைச்சக, போக்குவரத்து வரையறைகளை நிறைவு செய்யும் ஒழுங்குமுறைகள்

2) பாதுகாப்புச் சட்டம், 1903-ன் படி பாதுகாப்பு அமைச்சக ஒழுங்குமுறைப்படி, விமானப்படை 100 மீட்டர் சுற்றளவிற்குள் நிறைவு

3) சுற்றுச் சூழல் சட்டம், 1986(Environment (Protection) Act, 1986)-ன் படி கடற்கரையோர மண்டலங்கள் அறிவிப்பு

4) நகராட்சி கட்டிட விதிகள், 1993-ஐ நிறைவு செய்ய வேண்டும். (The Tamil Nadu District Municipalities (Hill Stations) Building Rules, 1993)

5) Annexure-XI ன் படி CMDA Area-வில் வரக்கூடாது.

6) Annexure-XIX ன் படி Red Hills Catchment Area வில் வரக்கூடாது

7)  Ancient Monuments and Archaeological Sites and Remains Act, 1959 மற்றும்  Tamil Nadu Ancient and Historical Monuments and Archaeological Sites and Remains Act, 1966 தொல்லியல் பகுதியில் வரக்கூடாது

விதி 7 - முறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் (Guidelines for regularization)

a) முறைப்படுத்துவதற்கான மனை அல்லது உட்பிரிவு நிலமானது 2.01.02016 முன்னர் விற்பனை செய்யப்பட்டிருக்க வேண்டும்.

b) அனுமதியற்ற மனைப்பிரிவு முறைப்படுத்துவதற்கு தொடர்ச்சியாக அமையும் மனைகளாக இருக்க வேண்டும்.

c) எந்தவொரு மனையும் முறைப்படுத்துவதற்கு பொது அணுகுசாலை அல்லது பொதுப்பாதை மூலம் அணுகுசாலை அமையுமாயின் அப்பாதையானது மனுதாரருக்கு உரிமை உள்ளதாக இருக்க வேண்டும்.

d) அணுகுசாலையிலிருந்து மனைப்பிரிவிற்கு வரும் பாதையின் அகலம் மாநகராட்சியாக மற்றும் நகராட்சியாக இருந்தால் 4.8 மீட்டர் அகலமும் பேரூராட்சி மற்றும் ஊராட்சியாக இருந்தால் 3.6 மீட்டர் ஆக இருக்கலாம்.

e) தனித்த மனைகளாக இருந்தால் (In case of individual plot )

i. அனைத்து மனைகளும் approval of layout frame work –ன் படி உரிய அலுவலரால் விதி 2(2)iii-ன்படி முறைப்படுத்தலாம்.

ii. தனித்த மனைகளின் உட்பிரிவு கட்டிடத்தில் விதி பாதிப்புகள் இருந்தாலும் முறைப்படுத்தலாம்.

iii. மனைப்பிரிவில் உள்ள தனித்த மனைகள் இத்துறையால் ஒப்புதல் அளிக்கப்படும் (layout frame work) மனைகளின் அளவுகள் மற்றும் அணுகுசாலையை நிறைவு செய்யும் வகையில் அமைதல் வேண்டும்.

iv. உரிய அலுவலரின் அறிவுறுத்தலின்படி சாலையை  கலப்படுத்துவதற்கு குறிப்பிட்ட மனையிடத்தை உள்ளாட்சிக்கு தானம் செய்ய வேண்டியிருந்தால் அது தானப்பத்திரத்தின்படி உள்ளாட்சிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

f) மனைப்பிரிவில் உள்ள மனையில் 1/3-க்கு குறைவாக விற்பனை செய்யப்பட்டிருந்தால்

i. மனைப்பிரிவு அணுகுசாலை நீங்கலாக ஏனைய வளர்ச்சி ஒழுங்குமுறை அல்லது வளர்ச்சி கட்டுப்பாடு ஒழுங்குமுறை (Development Regulations or Development Control Regulations)-ஐ நிறைவு செய்ய வேண்டும் மற்றும் மனைகளின் நில உபயோகம் பெறப்படல் வேண்டும். விவசாய உபயோகத்திலிருந்து மற்றொரு உபயோகத்திற்கு மாற்றம் செய்வதாக இருந்தால் மாற்றலாம்.

g) மனைப்பிரிவில் உள்ள மனைகள் 1/3-க்கு மேல் 2/3-க்குள் விற்பனை செய்திருந்தால்

i) வளர்ச்சி ஒழுங்குமுறை அல்லது வளர்ச்சி கட்டுப்பாடு ஒழுங்குமுறை -ன் படி இருக்க வேண்டும். சாலையின் அகலம், மனையின் உபயோகத்திற்கு விதிவிலக்கு உண்டு.

ii) மனைப்பிரிவில் விற்பனையாகாத மனைகளில், விற்பனையை மேம்படுத்தும் வகையில் அங்கிகரிக்கப்படலாம்.

iii) மனைப்பிரிவு முழுதும்  விவசாய நிலத்தில் அமைந்திருந்தால் , உரிய அலுவலர் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, தடுத்தல், அகற்றல்  போன்றவற்றால் எவ்வளவு  மூழ்கடித்தலை (level of inundation) என்பதை கணக்கில் கொள்ளவேண்டும்.

iv) மனைப்பிரிவில் விற்பனையாகாத மனைகள், இருக்கும் பட்சத்தில், மனை உரிமையாளர் மேல் நிலை நீர்த்தொட்டி, மின்மாற்றி ஆகியவற்றுக்கு இடத்தை உள்ளாட்சியிடம் ஒப்படைக்க வேண்டும்.

விதி 8 - முறைப்படுத்துவதின் நோக்கம் Effect of regularization

மேற்கண்ட விதிகளின்படி முறைப்படுத்துப்படும் மனைகள் குடியிருப்பு உபயோகத்திற்கு மட்டுமே முறைப்படுத்தப்படும்

விதி 9 - முறைப்படுத்துவதற்கான கட்டணம் Regularisation Charge

மனை (ம) மனைப்பிரிவுகள் முறைப்படுத்துவதற்கு கீழ்கண்டவாறு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

i) மாநகராட்சி ரூ.100 / 1 ச.மீ
ii) நகராட்சி ரூ.60 / 1 ச.மீ
iii) பேரூராட்சி (ம)  கிராம ஊராட்சி ரூ.30 – 1 ச.மீ
மேற்கண்ட அனைத்து கட்டணங்களும் அரசாங்க கணக்கில் வரவு வைக்கப்படும்.

விதி 10 - வளர்ச்சி கட்டணம் வசூல் செய்தல் (Levy of Development Charge)

மனை (அ) மனைப்பிரிவு முறைப்படுத்துவதற்கு வளர்ச்சி கட்டணம் கீழ்கண்டவாறு வசூல் செய்யப்படும்

a) மாநகராட்சி ரூ.600 - 1 ச.மீ
b) சிறப்பு நகராட்சி ரூ.350 – 1 ச.மீ
c) நிலை-1  (ம) நிலை-2 நகராட்சி ரூ.250 - 1 ச.மீ
d) பேரூராட்சி ரூ.150 – 1 ச.மீ
e) கிராம ஊராட்சி ரூ.100 – 1 ச.மீ

மேற்கண்ட வளர்ச்சி கட்டணம் உள்ளாட்சி கணக்கில் வசூலிக்கப்படும்.

விதி 11 - திறவெளி ஒதுக்கீட்டிற்கான கட்டணம் Charges for Open space reservation (OSR) Area

1. உட்பிரிவில் உள்ள மனையை முறைப்படுத்துவதற்கு வளர்ச்சி கட்டுப்பாடு வரையறைகளின் படி திறவெளி ஒதுக்கீடு கணக்கீடு செய்து அதற்கு இணையான கட்டணம் வசூல் செய்யப்படும்.

2. மனைப்பிரிவுகளை முறைப்படுத்துவதற்கு 10% திறவெளி ஒதுக்கீடு இல்லையென்றால் Clause-7 விதி 2-ன் படி வழிகாட்டு மதிப்பீட்டின்படி திறவெளி ஒதுக்கீடு பரப்பளவிற்கு வழிகாட்டு மதிப்பீட்டின்படி கட்டணம் வசூலிக்கப்படும். 10% திறவெளி ஒதுக்கீட்டிற்கான மனை இருப்பின் அதனை மனைப்பிரிவின் பரப்பளவிலிருந்து கழித்து மேற்கண்டவாறு OSR பரப்பளவு மற்றும் அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும்

3. திறவெளி ஒதுக்கீட்டிற்கான கட்டணம் உரிய அலுவலரின் கணக்கில் விதி 1(2)ii-ன்படி நிலையிலுள்ள வழிகளின்படி வரவு வைக்கப்படும்.

விதி 12 - கூராய்வு கட்டணம் (Scrutiny fees)

கூராய்வு கட்டணம் மனைக்கு 500 வீதம் உரிய அலுவலரால் விதி (2)ii-ன்படி வசூல் செய்யப்படுகிறது.

விதி 13 - சந்தேகங்களை நீக்குதல்

முறைப்படுத்துவதற்கான கட்டணங்கள் நீங்கலாக ஏனைய மேற்படி கட்டணங்கள் ஏதும் வசூலித்தல் கூடாது

விதி 14 - விண்ணப்பங்களின் பரிசீலனை

1. உட்பிரிவில் உள்ள மனைகளை முறைப்படுத்துவதற்கு உரிய அலுவலர் விதி 2(2)i-ன்படி முறைப்படுத்துவதற்கான விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, நேராய்வு அணுகுசாலையின் நிலையை உறுதி செய்தும் கூடுதல் விவரங்கள் தேவைப்படின் அதனைப் பெற்றும் முறைப்படுத்தலாம். மனையை முறைப்படுத்துவதற்கு முன் உரிய அலுவலர் மனையான உட்பிரிவில் உள்ளதென்றும் மனைப்பிரிவில் இல்லையென்றும் சான்றளிக்க வேண்டும்.

மனையானது முறைப்படுத்துவதற்கு ஏதுவாக இருந்தால் முறைப்படுத்துவதற்கான கட்டணம் வளர்ச்சி கட்டணம் (ம) திறவெளி ஒதுக்கீட்டிற்கான கட்டணம் வசூலிப்பதற்கான கேட்பு வரைவு அனுப்ப வேண்டும். கட்டணங்கள் செலுத்தியதற்கான ரசீது பெறப்பட்ட பின்னர் உரிய அலுவலரால் மனைக்கான வரைபடம் முறைப்படுத்தப்படும்.

2. விதி 2(2)i-ன் படி principle approval of layout framework  ஒப்புதல் பெற்ற பின்னரே தனித்தனி மனைகள் உரிய அலுவலரால் விதி 2(2)ii-ன் படி முறைப்படுத்த இயலும்.

3. விதி 2(2) ii-ன்படி உரிய அலுவலர் மேற்கண்ட விதிகளின் படி நேராய்வு செய்து ஏதாவது கூடுதல் விபரங்கள் தேவைப்படின் அதனை பெற்று  principle approval of layout framework  தயார் செய்ய வேண்டும். அலுவலர் கூடுதல் விபரங்கள் விண்ணப்பித்த 60 நாட்களுக்குள் பெறவில்லையெனில் விண்ணப்பம் திருப்பப்படும்.

4. விதி 2(2) ii-ன்படி மனைப்பிரிவில் உரிய அலுவலரால் திருத்தம் செய்யப்படின் அலுவலரை நிறைவு செய்யும் வகையில் அதாவது திறவெளி ஒதுக்கீடான மனையிடம் (ம) சாலையை சம்பந்தப்பட்ட உள்ளாட்சிக்கு சமர்ப்பிக்கும் முறையையும் சேர்த்ததாகும்

5. விதி 2(2)ii-ன்படி உரிய அலுவலர்களால் அறிவுறுத்தியபடி மனைப்பிரிவை திருத்தம் செய்து சாலைகள் மற்றும் OSR ஒப்படைப்பு செய்த பின்னரே principle approval of layout framework -ற்கு அனுமதி அளிக்க வேண்டும்.

6. In principle approval of layout framework பெற்ற பிறகு உரிய அலுவலரிடம் தனித்தனி மனைகள் முறைப்படுத்துவதற்கு மனையின் அளவு (ம) சாலையின் அகலம் (ம) முறைப்படுத்துவதற்கான கட்டணங்களில் பெற்ற பிறகு முறைப்படுத்த வேண்டும்.

7. உரிய கட்டணம் பெற்றபிறகு விதி 2(2)i-ன்படி உரிய அலுவலரால் வரைபடத்தில் உள்ள தனித்தனி மனைகள் முறைப்படுத்த முடியும்

8. விதி 5(4)-ன் படி மனைப்பிரிவு தன்னிச்சையாக அலுவலரால் விதி 2(2) )ii-ன்படி அலுவலரால் விதி 2(2)ii-ன்படி நேராய்வு செய்து வழிகாட்டு விதி 7 (ம) விதி 7-ன் படி உரிய கட்டணங்கள் அதாவது கூராய்வு கட்டணம். முறைப்படுத்துவதற்கான கட்டணம் வளர்ச்சி கட்டணம். திறவெறி கட்டணம் மனைப்பிரிவை மேம்படுத்துவதற்கான கட்டணம் ஆகியவை மனைப்பிரிவின் மனை உரிமையாளரிடம் விகிதப் சார்பு (pro-rata ) அளவில் கணக்கீடு செய்து வசூலிக்க வேண்டும்.

b) விதி 2(2)ii-ன்படி மனைப்பிரிவில் திருத்தம் மேற்கொண்டு  principle approval of layout framework -ற்கு அனுமதி வழங்க இயலும். அதனை தொடர்ந்து விதி 2(2)i-ன்படி உரிய கட்டணங்கள் மனை உரிமையாளரிடம் பெறுவதற்கு உரிய அலுவலருக்கு விதி 2(2)i-ன்படி மேலனுப்பப்படும்.

c) principle approval of layout framework -ன்படி உரிய கட்டணங்கள் பெறப்பட்ட பின்னர் விதி எண் 2(2) i-ன்படி மனையிடத்தின் உரிமையாளரின் உரிமையை உறுதி செய்து மனையை முறைப்படுத்துவதற்கான ஆணையை பிறப்பிக்க வேண்டும். மேலும் அலுவலர் மனைப்பிரிவு உரிமையாளர் மேற்கண்ட மனைப்பிரிவை மேம்படுத்துவதற்கான நிபந்தனைகளை குறிப்பிட வேண்டும். உள்ளாட்சி சட்டப்படி சாலைப் பெற்று பராமரிக்க வேண்டும்.

9. அனுமதியற்ற மனைப்பிரிவின் கட்டமைப்பை (framework) முறைப்படுத்தியதால் தானாக தனித்தனி மனைகள் முறைப்படுத்தியதாக கருதுதல் கூடாது. மனைப்பிரிவு கட்டமைப்பை முறைப்படுத்தியதற்கு பிறகு மனைகளை தனியாக முறைப்படுத்த வேண்டும்.

10. முறைப்படுத்துவதற்கான அனைத்து கட்டணங்களும் கேட்பு செய்த 30 நாட்களுக்குள் பெறப்பட வேண்டும். தவறும்பட்சத்தில் ஆண்டுக்கு 6% வீதம் வட்டி வசூலிக்கப்படும். மேலும் கட்டணம் 90 நாட்களுக்குள் பெறப்படவில்லை எனில் விண்ணப்பம் திருப்பப்படும்.

11. விண்ணப்பம் விதிகளில் குறிப்பிடப்பட்ட வடிவில் இல்லையெனில் அதனை திருப்பலாம்.

12. விதி 2(2)i-ன்படி principle approval of layout framework-ன்படி சாலையை (ம) திறவெளியை-ஐ தானமாக(Gift Deed) பெறுவதற்கு சம்பந்தபட்ட தாசில்தாரின் வருவாய் ஆவணங்களில் மாற்றம் செய்வதற்கு ஏதுவாக அனுப்ப வேண்டும்.

விதி 15 - முறைப்படுத்தாமையை தொடர்ந்து மேற்கண்டவாறு அனுமதியற்ற மனை (ம) மனைப்பிரிவை முறைப்படுத்தவில்லையென்றால் விளைவுகள் (Consequences of non-regularisation)

a) மின்சாரம், குடிநீர், கழிவுநீர் வடிகால் அமைப்பு துண்டிக்கப்படும்

b) மேற்கண்ட அனுமதியற்ற மனை (அ) மனைப்பிரிவு பதிவு சட்டம் 1908-ன் படி பதிவு செய்ய இயலாது.

b) எந்தவொரு கட்டிடத்திற்கும் அனுமதி வழங்க முடியாது

விதி 16 - வளர்ச்சி கட்டணம் தனி கணக்கில் பராமரித்தல் (Amount levied towards development charges to be kept in separate account)

வளர்ச்சி கட்டணத்தை தனி கணக்கில் உள்ளாட்சி வசூல் செய்து அதனை பல தேவைகளுக்கும் கட்டிட வடிவமைப்பு (ம) வளர்ச்சி (ம) மத்திய அரசாங்கத்தால் ஆதரவளிக்கப்படும் (sponsored )திட்டத்திற்கும் பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதி 17 - மேல்முறையீடு (Appeal)

எந்தவொரு நபரும் CMDA வாக இருந்தால் மேல்முறையீடு அரசுக்கும்  மற்ற பகுதியாக இருந்தால் நகர் ஊரமைப்பு இயக்ககத்துக்கும் (Directorate of Town and Country Planning) ரசீது பெறப்பட்ட 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும்.

அரசு (அ) நகர் ஊரமைப்பு துறை 30 நாட்களுக்கு மேலானால் மேல்முறையீடை ஏற்றுக்கொள்ளலாம் (அ) ஏற்றுக்கொள்ளாமலும் இருக்கலாம். எதிர்வாதியின் காரணம் ஏற்றுக்கொள்ளுமாறு இருந்தால் விருப்பப்பட்டு ஏற்றுக் கொள்ளலாம்.

விதி 18 - திருத்தம் (Revision)

எந்தவொரு நபரும் நகர் ஊரமைப்பு துறையின் ஆணையை எதிர்த்து அரசுக்கு ஆணை பெற்ற 30 நாட்களுக்குள் அரசுக்கு அனுப்பி புதுப்பிக்கலாம்.புதிப்பித்தலை அரசு ஏற்றுக்கொள்ளலாம் (அ) ஏற்றுக்கொள்ளாமலும் இருக்கலாம்.

விதி 19 - மறு ஆய்வு (Review)

எந்தவொரு நபரும் CMDA பகுதிக்குள் அமையும் மனைக்கு வழங்கப்பட்ட அரசின் ஆணையை மறு ஆய்வு செய்ய அரசுக்கு 30 நாட்களுக்குள் அனுப்பலாம்.

அதனை அரசு ஏற்றுக்கொள்ளலாம் (அ) ஏற்றுக்கொள்ளாமலும் இருக்கலாம்

விதி 20 - பொறுப்புத்துறப்பு (Disclaimer)

மேற்காண் விதிகளின்படி வரன் முறைப்படுத்திய மனையில் அமையும் கட்டிடம் வரைமுறைப்படுத்தியதற்கு பொறுப்பாகாமை ஆகும் (ம) எந்தவொரு உரிமையாளரும் அதில் கட்டப்பட்ட கட்டிடத்தை அழிப்பதற்கு பிரிவு 56 (ம) 57-க் கீழ் உரிமை கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதி 21 - நிலையற்ற ஒதுக்கீடு (Transitory provisions)

1.அனைத்து மேல்முறையீட்டாளர் விண்ணப்பங்களும் கமிட்டி (அ) அரசாங்கத்தில் நிலுவையில் இருந்தாலும் மேற்கண்ட விதிகளின்படி முறைப்படுத்துவதற்கு மேல்முறையீட்டு விண்ணப்பங்களை உரிய அலுவலருக்கு அனுப்பலாம். அதனை மேற்கண்ட விதிகளின்படி பரிசீலிக்கப்படும்.

2. தள்ளுபடில செய்யப்பட்ட அனைத்து விண்ணப்பங்களின் மனுதாரர் விதிகளின் விளைவுகள் நடைமுறைக்கு வரும்முன் மேற்கண்ட விதிகளை நிறைவு செய்யும் வகையில் புதிய விண்ணப்பம் அலுவலருக்கு அனுப்பப்பட வேண்டும்

- C.P. சரவணன்,  வழக்கறிஞர்

References -

G.O.(Ms).No.78 Housing and Urban Development [UD4(3)] Department Dated:04.05.2017
G.O.(Ms).No.79 Housing and Urban Development [UD4(3)] Department Dated:04.05.2017
G.O.(Ms).No.85 Housing and Urban Development [UD4(3)] Department Dated:16.05.2017
[01/10, 2:42 PM] Adc Murugan Chennai Hr Court: கிராம ஊராட்சியில் பராமாிக்கப்படும் படிவங்கள்
கிராம ஊராட்சியில் பராமாிக்கப்படும் படிவங்கள்

அரசாணை எண் 92 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை நாள்26.03.1997 ன் படி  அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 1-31 வரையிலான

படிவங்கள் பராமாிக்கப்பட வேண்டும்

படிவம் எண் -1   வீட்டு வாி கேட்புத் தொகைக்கான அறிவுப்பு.

படிவம் எண் -2   வீட்டு வாி  இரசீதுகள்

படிவம் எண் -3  வீட்டு வாி  (நிலுவை  தொகை நடப்பு வாி்த்தொகை)

படிவம் எண் -4  தொழில் வாி பற்றுச்சீட்டு

படிவம் எண் -5  தொழில் வாி பற்றுச்சீட்டு( நிலுவைதிதொகை நடப்பு வாி்த்தொகை)

படிவம் எண் -6   பல்வகை பற்றுச்சீட்டு

படிவம் எண் - 7  வாிகள் மற்றும்  பல்வகை இனங்கனில் வசூல் பதிவேடு

படிவம் எண் -8   மானியங்களில் ,ஒதுக்கப்பட்ட  இனங்கனில் வசூல் பதிவேடு

படிவம் எண் -9   கிராம ஊராட்சி நிதி சிட்டா

படிவம் எண் -10   பல்வகை வரவு வசூல் நிலுவை பதிவேடு

படிவம் எண் -11 ரொக்கப் புத்தகம் (கிராம ஊராட்சி நிதிக் கணக்கு)

படிவம் எண் -12  திருப்பி  வசூலிக்கதக்க  முன் பணங்கள்  பதிவேடு

படிவம் எண் -13 வகைப்பாடு செய்யப்பட்ட  தொகை செலுத்தங்கள் பதிவேடு.

படிவம் எண் -14   பற்றொப்ப  பதிவேடு

படிவம் எண் -15 மதீப்பீடுகள் மற்றும் ஒதுக்கீடு  பற்றிய    பதிவேடு

படிவம் எண் -16  கிராம ஊராட்சியின் சொத்துக்கள் பற்றிய    பதிவேடு.

படிவம் எண் -17  பராமாிப்பு   பதிவேடு ஊராட்சியில் சொத்துக்கள் பராமாிப்பு  செலவுகள் ஆகியவை பதிவு செய்யப்பட வேண்டும்

படிவம் எண் -18  ஊராட்சியில்   வாங்கப்படும் பொருட்களின் விபரங்கள்  பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்

படிவம் எண் -19   செலவுச்சீட்டு  இரசீது புத்தகங்களின் விவரங்கள் பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்.

படிவம் எண் -20  தொகை மதிப்பு படிவங்கள் குறித்து இருப்பு  பதிவேடு ,அளவுச் சுவடிகள் ,ஒப்பந்த படிவங்கள்  முதலியவை.

படிவம் எண் -21 விற்பனைப் பதிவேடு (முடங்கு பொருள்  பதிவேடு)

படிவம் எண் -22 கட்டுமானப் பொருள்கள் குறித்த பதிவேமு

படிவம் எண் -23  ரொக்கப்புத்தகம் ( மானியங்களின் வரவினங்கள்)  பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்.

படிவம் எண் -24  ரொக்கப்புத்தகம் ( அளிக்கப்பட்ட மானியங்கள்)  பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்.

படிவம் எண் -25  மதீப்பீடுகள் மற்றும் ஒதுக்கீடு  பற்றிய    பதிவேடு(அளிக்கப்பட்ட மானியங்கள்  ) பதிவேடு

படிவம் எண் -26  ரொக்கப்  பதிவேடு  புத்தகம் (திட்ட நிதி)

படிவம் எண் -27  வகைப்படுத்தப்பட்ட தொகை வரவுகள் மற்றும் தொகைச்செலவுகள்(திட்ட நிதி  கணக்கு)  

படிவம் எண் -28  திட்ட பணிகள் பதிவேடு மதீப்பீடுகள் மற்றும் ஒதுக்கீடு  பற்றிய    பதிவேடு(அளிக்கப்பட்ட மானியங்கள்  ) பதிவேடு

படிவம் எண் -29 திட்டத்தின் மூலம் பயன் அடைந்தோர் விபரம் அடங்கிய பதிவேடு

படிவம் எண் -30  ஆய்வாளர்க்கு அனுப்ப வேண்டிய மூன்று வகை கணக்கு வரவு செலவு குறித்த மாதாந்திர விபரம்

படிவம் எண் -31சென்ற ஆண்டின் வரவு செலவும் -எதிர் வரும் ஆண்டிற்னு உத்தேசமாக மேற்கொள்ளவுள்ள வரவு-செலவு விபரம் குறிக்கப்பட வேண்டும்
[01/10, 2:42 PM] Adc Murugan Chennai Hr Court: ஊரக வளாச்சி முகமை
    
மாவட்ட ஊரக வளாச்சி முகமை
மத்திய அரசு திட்டங்கள்:
பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் வளர்ச்சித் திட்டம்:
கிராமப்புற மற்றும் நகா்ப்புற பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளால் உருவாக்கப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளில் விடுபட்ட பணிகளை முடிப்பதே இத்திட்டத்தின் நோக்கம். 2011-12ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும், இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ஆண்டு ஒன்றிற்கு ரூ.2 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ஆண்டு ஒதுக்கீடு தொகையான ரூ.5 கோடியில் நிர்வாக செலவினத் தொகை 0.5%-யிலிருந்து 2% ஆக 2011-12ஆம் ஆண்டு முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலங்களவை உறுப்பினர்களும் தமது தொகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.5 கோடிக்கு பணிகளை மேற்கொள்ள தேர்வு செய்து மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்கலாம். மாநிலங்களவை உறுப்பினர்களைப் பொறுத்தவரை தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத்திற்குள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாவட்டங்களில் பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்கலாம். மக்களவை மற்றும் மாநிலங்களவை நியமன உறுப்பினர்கள் நாட்டின் எந்த ஒரு மாநிலத்திலும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாவட்டங்களில் தாம் விரும்பிய பணிகளை இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தலாம். அப்பணிக்கான நிர்வாக அனுமதியினை மாவட்ட ஆட்சியர் வழங்குவார். இத்திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளில் எடுத்துச் செய்யப்பட வேண்டிய பணிகளின் விபரம் மற்றும் எதிர்மறை பட்டியலில் இடம் பெற்ற பணிகளின் விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் அனைத்து விதமான பராமரிப்பு பணிகள் தடை செய்யப்பட்டுள்ளது. குளம், ஆறு, சிறு பாசனக்குளங்கள் மற்றும் கால்வாய்கள் தூர்வாறும் பணிகள் பராமரிப்பு பணிகளாக கருதப்படுவதால் இத்திட்டத்தின் கீழ் செய்ய இயலாது. மாவட்ட ஆட்சியர் தேர்ந்தெடுக்கப்பட்ட பணிகளுக்கான நிர்வாக அனுமதியினை வழங்குவதோடு செயல்படுத்தும் முகமையையும் கண்டறிவார்.

பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம்:
மத்திய அரசால் பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டம் 25.12.2000 அன்று ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டம் 100 சதவிகிதம் மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படுவதாகும். இத்திட்டத்தின்படி அனைத்து பருவ காலத்திற்கு ஏற்ற சாலை வசதியினை 1000 மக்கள் தொகை கொண்ட குடியிருப்புகளுக்கு முதற்கட்டமாக 2003ஆம் ஆண்டுக்குள்ளும், 500 முதல் 1000 வரை மக்கள் தொகை கொண்ட குடியிருப்பு பகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக 2007ஆம் ஆண்டுக்குள்ளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  தற்போது இந்திய அரசு ஊரக வளர்ச்சி அமைச்சகம் வழங்கிய அரசு ஆணை(நிலை) எண். 909RD&PR(CGS-II) துறை, நாள் 01.08.2016-ன்படி 25.998 கி.மீ. நீளத்திற்கு 7 சாலைப் பணிகள் அனுமதிக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 01.04.2008 முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் முக்கிய நோக்கம்

வாழ்வாதாரத்தை உயா்த்துதல்
ஒவ்வொரு குடும்பத்திற்கும் 100 நாள் வேலை வாய்ப்பினை வழங்குதல்
ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம அளவில் அவர்கள் செய்த வேலையின் அளவுப்படி ரூ.205/- ஊதியம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசாணை (நிலை) எண். 45 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை (ம.அ.தி.1) துறை நாள் : 03.04.2017ன்படி 01.04.2017 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பதிவேடுகள் பராமரித்தல் விபரங்கள்:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் சரியான முறையில் பதிவேடுகளை பராமரிப்பதை உறுதி செய்ய கீழ் குறிப்பிடும் பதிவேடுகளை அரசு நிர்ணயித்த படிவத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையினால் மாவட்ட அளவிலும், ஊராட்சி ஒன்றிய அளவிலும் மற்றும் ஊராட்சி அளவிலும் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளது.
கிராம ஊராட்சி :

விண்ணப்ப பதிவேடு மற்று்ம அடையாள அட்டை வழங்கும் பதிவேடு
கிராம சபா பதிவேடு
வேலை கோருதல், வேலை ஒதுக்கீடு செய்தல் மற்றும் ஊதியம் பட்டுவாடா செய்தல் பதிவேடு
வேலை பதிவேடு
நிரந்தர சொத்துப் பதிவேடு
புகார் பதிவேடு
கட்டுமான இருப்புப் பதிவேடு
வேலை அடையாள அட்டை இருப்புப் பதிவேடு
வருகைப் பட்டியல் இருப்புப் பதிவேடு
ஊராட்சி ஒன்றிய அளவில் :

பட்டியல் அனுமதிக்கும் பதிவேடு
ஊராட்சி வாரியாக நிதி விடுவிப்பு மற்றும் செலவு பதிவேடு
வேலை அடையாள அட்டை இருப்புப் பதிவேடு
வருகைப் பட்டியல் இருப்புப் பதிவேடு
மதிப்பீடு மற்றும் ஒதுக்கீடுக்கான பதிவேடு
மாவட்ட அளவில்:
வாராந்திர செலவினப் பதிவேடு
ஊராட்சி ஒன்றியம் வாரியாக நிதி விடுவிப்பு மற்றும் செலவு பதிவேடு
வேலை அடையாள அட்டை இருப்புப் பதிவேடு
வருகைப் பட்டியல் இருப்புப் பதிவேடு
“1299” புகார் பதிவேடு
வேலை அட்டைகள் மற்றும் வருகைப் பதிவேடு
அரசினால் வழங்கப்பட்ட அறிவுரைப்படி வேலை அட்டைகள் மற்றும் வருகை பதிவேடுகள் தேவையினை கணக்கிட்டு அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சி இயக்குநரின் அறிவுரைப்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் கீழ்க்குறிப்பிடும் முன்னுரிமைப்படி வேலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஒரு பொது வேலையின் மதிப்பு ரூ.3.00 இலட்சத்திற்கும்் குறைவாக இருத்தல் கூடாது
சுலபமாக செயல்படுத்துதல்
மேலான கண்காணிப்பு
பார்க்கக்கூடிய உறுதியான சொத்துக்களை உருவாக்குதல் மற்றும் துண்டு துண்டான வேலைகளை தேர்வு செய்யாமல் ஒட்டு மொத்தமாக வேலைகளை செயல்படுத்துதல்
முழு சுகாதார இயக்கம் – தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) – (SWACCH BHARATH MISSION(G):
முழு சுகாதார இயக்கம் இந்திய அரசால் அனைத்து வீடுகளிலும் சுகாதார வசதிகளை உருவாக்கவும் சுத்தமான பழக்க வழக்கங்களை மேம்படுத்தவும் முதலில் 1999ஆம் ஆண்டு கடலூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் துவங்கப்பட்டு, 2004ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் விரிவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ஊரகப் பகுதிகளில் விரைவாக செயல்படுத்த நிர்மல் பாரத் அபியான் (NBA) என்று மறு பெயரிடப்பட்Lது.
இதன் தொடர்ச்சியாக மகாத்மா காந்தியின் 150வது பிறந்த ஆண்டினை முன்னிட்டு 2019ஆம் ஆண்டிற்குள் தூய்மையான பாரதத்தினை உருவாக்கிடும் பொருட்டு 2014ஆம் வருடம் அக்டோபர் 2ஆம் தேதி தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) -(SWACCH BHARATH MISSION(G)-ஐ இந்திய அரசு ஏற்படுத்தியது.

தனிநபர் இல்லக் கழிப்பறை :
தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மற்றும் குறிப்பிட்ட வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ள (தாழ்த்தப்பட்டவர் / பழங்குடியினர், சிறு மற்றும் குறு விவசாயிகள், நிலமற்ற தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகள்) வீடுகளுக்கு ஒரு கழிப்பறை கட்டுவதற்கு ரூ.12000/- வரை ஊக்கத் தொகை வழங்கப்படும். இத்தொகை முழுவதுமாக தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ் பயனாளிகளின் பங்குத் தொகை இல்லாமல் மத்திய அரசின் பங்குத் தொகையாக ரூ.9000/-ம் மற்றும் மாநில அரசின் பங்குத் தொகை ரூ.3000/-ம் வழங்கப்படும். மத்திய மற்றும் மாநில அரசின் நிதி உதவியுடன் கட்டப்படும் அனைத்து வீடுகளும் கழிப்பறையுடன் கட்டப்படும்.

மாநில அரசு திட்டங்கள்:
தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் – II-2016-17
தாய் திட்டத்தின் கீழ் 2011-12 முதல் 2015-16ஆம் ஆண்டு வரை ஐந்து பகுதிகளாக குறைந்தபட்ச அடிப்படை வசதிகளான சாலைகள், குடிநீர் பணிகள், தெரு விளக்குகள், மயான மேம்பாடு மற்றும் கூடுதல் பணிகளான அங்கன்வாடி மையங்கள், பொது விநியோக கடை, சுய உதவிக்குழு கட்டிடம், கதிரடிக்கும் களம், விளையாட்டு மைதானம் மற்றும் இதர தேவையான பணிகள் எடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.
12524 கிராம பஞ்சாயத்துகளிலும் அடிப்படை தேவைகள் அதிக அளவில் முழுமையடைந்தமையால் தாய் – II திட்டத்தின் கீழ் கீழ்க்காணும் 3 வகைகளில் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

சிறுபாசன குளங்களை மேம்படுத்துதல் (40%)
சாலைப் பணிகள் (40%)
உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை தேவைகள் (20%)
சிறு பாசன குளங்களை மேம்படுத்துதல்:
ஊராட்சி ஒன்றியங்களின் கீழுள்ள சிறுபாசன குளங்களை அதன் முழு அளவிற்கு மேம்படுத்துதல், நிலத்தடி நீரை அதிகரித்தல், அதிகப்படியான நீர் வீணாவதை தடுத்தல், நீர் ஆதாரங்களில் உடைப்புகள் ஏற்படுவதை தடுத்தல் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான நீரினை சேமிப்பதை முறைப்படுத்துதல் அவற்றின் மூலம் தேவையான குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்தல், பாசன வசதி மூலம் தானிய உற்பத்தியை அதிகரித்தல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கங்கள் ஆகும்.

சாலைகள் – அனுமதிக்கப்பட்ட பணிகள்:
மண்சாலைகளை தார்ச்சலைகளாக மாற்றுதல்
பழுதடைந்துள்ள சாலைகளை பலப்படுத்துதல்
பழுதடைந்துள்ள தார்ச் சாலைகளை புதுப்பித்தல்
அடிப்படை தேவைகள் மற்றும் வசதிகள்:
தாய் திட்டத்தின் கீழ் 2011-12 முதல் 2015-16 வரையில் அத்தியாவசியமான அடிப்படை வசதி பணிகளான குடிநீர் வழங்குதல், தெரு விளக்குகள், இணைப்பு சாலை, மயான மேம்பாடு மற்றும் மயான சாலைகள் போன்றவை அதிக அளவில் ஏற்படுத்தப்பட்டுவி்ட்ட போதிலும், சில இடங்களில் குறிப்பாக மலைவாழ் மக்கள் குடியிருப்பு, ஆதிதிராவிடர் குடியிருப்பு, ஆதிதிராவிடர் காலனி குடியிருப்புகள் மற்றும் அரசின் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட குடியிருப்புகளில் அடிப்படை தேவைகள் செய்யப்பட வேண்டியுள்ளது. சில அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளான 55 LPCD தரத்தில் குடிநீர் வழங்கும் பணிகளை பரரமரித்தல், புதிய குடியிருப்புகளுக்கு தெரு விளக்குகள் அமைத்தல், மயானம் மற்றும் மயான பாதை, குறிப்பாக ஆதிதிராவிட நலத்துறை உருவாக்கிய புதிய குடியிருப்புகளுக்கு மயானங்கள் மேம்படுத்துதல் புதிய குடியிருப்புகளில் சாலைகள் மேம்படுத்துதல் மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளை மேம்படுத்துல் போன்ற விடுபட்ட பணிகள் செய்யப்பட வேண்டியுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு 2016-17 முதல் 2020-21 வரையிலான ஐந்து ஆண்டுகளில் தாய்-II தி்ட்டத்தின் கீழ் விடுபட்டுள்ள குடிநீர் வழங்கும் பணி, தெரு விளக்குகள் அமைக்கும் பணி, தெரு / பாதை மேம்படுத்துதல் மற்றும் மயான மேம்பாடு போன்ற பணிகளை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அம்மா பூங்கா – 2016-17:
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழக சட்டப் பேரவையில் 29.08.2016 அன்று 110 விதியின் கீழ் கிராம ஊராட்சிகளில் குழந்தைகள், பெண்கள் மற்றும் பெரியோர்களுக்கு பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி சாதனங்கள், நடைபாதைகள், சிமெண்ட் பெஞ்சுகள், குடிநீர் வசதிகள், புல்தரை, பசுமைத் தோட்டம் மற்றும் கழிப்பறை ஆகிய அம்சங்களுடன் கூடிய 500 “அம்மா பூங்காக்கள்” ஒவ்வொன்றும் ரூ.20.00 இலட்சம் வீதம் ரூ.100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நகர்புறப் பகுதியை ஒட்டியுள்ள கிராமபுறப் பகுதிகளில் 2016-17ஆம் ஆண்டு அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

அம்மா பூங்காவின் நன்மைகள்:
உடல் உறுதியினை மேம்படுத்துகிறது
குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் முதியவர்களின் மன மகிழ்ச்சியினை உருவாக்குகிறது
மனம் மற்றும் உடல் நலத்தினை மேம்படுத்துகிறது
கிராமங்களை அழகுபடுத்துகிறது
நடை பயிற்சிக்கு பாதை அமைக்கப்படுகிறது
அம்மா பூங்கா தேர்வு செய்யும் முறை மற்றும் கூறுகள் :

மாவட்ட ஆட்சியர் ரூ.20.00 இலட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் மற்றும் 14வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.20.00 இலட்சத்திற்கும் மேலான நிதியுதவி பெறும் கிராம ஊராட்சிகளில் குடியிருப்புக்கு மத்தியில் நில இருப்பைப் பொறுத்து அம்மா பூங்கா அமைக்க ஊராட்சியை தோ்ந்தெடுப்பார். இதில் குறைபாடு இருப்பின் அந்த ஊராட்சியின் பொது நிதி மற்றும் ஊராட்சி ஒன்றிய நிதிகள் ஒருங்கிணைக்கப்படும்.

அம்மா பூங்கா அமைக்க எங்கு 15000 ச.அடி முதல் 20,000 ச.அடி வரையிலான பரப்பு உள்ளதோ அல்லது கிராம ஊராட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட திறந்த வெளி (Open Spaced Reserved – OSR) உள்ளதோ அக்கிராம ஊராட்சியில் பூங்கா அமைக்கப்படும்.

அம்மா பூங்காவில் கீழ்க்காணும் வசதிகள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும்

சிமெண்ட் கான்கிரீட் அல்லது பேவர் பிளாக் நடைபாதை அமைத்தல்
LED பல்பு மூலம் விளக்குகள் அமைத்தல்
சிமெண்ட் / கிரானைட் மேடை பெஞ்சுகள் அல்லது துருப்பிடிக்காத இரும்பு பெஞ்சுகள்
பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கான கழிப்பிடங்கள
தோட்ட பராமரிப்பு மற்றும் கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி செய்து கொடுத்தல்
குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்களுடன் விளையாட்டு மைதானம் அமைத்தல்
எவர்சில்வர் வரவேற்பு நுழைவு வாயில் மற்றும் வெளியே செல்வதற்கான வாயில்
பாதுகாப்பு கம்பிகளுடன் கூடிய சுற்று சுவர்
பூங்காவில் உடற்பயிற்சிக்கான உபகரணங்களை நிறுவுதல்
தகவல் பலகைகள் மற்றும் அறிவிப்பு பலகைகளை நிறுவுதல்
தேவைப்படும் இடங்களில் 8 வடிவ நடைபயிற்சி பாதை அமைத்தல்
அம்மா உடற்பயிற்சி மையம் – 2016-17:
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழக சட்டப் பேரவையில் 29.08.2016 அன்று 110 விதியின் கீழ் கிராம ஊராட்சிகளில் ”ஊரகப் பகுதி இளைஞர்களுக்கு உடல் திறன் மற்றும் மனவளத்தினை மேம்படுத்த ஊரகப் பகுதிகளில், அம்மா உடற்பயிற்சிக் கூடங்கள்” அமைக்கப்படும். ஒவ்வொன்றும் 10 இலட்சம் ரூபாய் செலவினல் 500 அம்மா உடற்பயிற்சிக் கூடங்கள் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ஆண்டு அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
ஒவ்வொரு உடற்பயிற்சி கூடத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையான ரூ.10.00 இலட்சத்தில், உடற்பயிற்சி சாதனங்கள் கொள்முதல் செய்வதற்கு ரூ.4.21 லட்சமும் மீதமுள்ள ரூ.5.79 இலட்சத்தில் கூரை, தரை, வண்ணமிட்ட கதவுடன் கூடிய 1161 ச.அடியில் மொத்த உடற்பயிற்சி கூட கட்டுமானத்திற்கு உபயோகப்படுத்த வேண்டும்.

அம்மா உடற்பயிற்சி கூட நன்மைகள்:
கிராமப்புற இளைஞர்களுக்கு உடற்பயிற்சிக்காகவும், உடல் உறுதியை பாதுகாக்கவும் உதவி புரிகிறது
ஊரக மக்களின் உடல் நலம் காக்கவும், நோய்களை தடுக்கும் மனப்பான்மை அதிகரிக்கிறது
இளைஞர்களி்ன மன வலிமையை அதிகரிக்கிறது
இளைஞர்களை விளையாட்டு போட்டிகளுக்கு தயார் செய்ய உதவுகிறது
அம்மா உடற்பயிற்சி கூடம் இடம் தேர்வு :-

அம்மா G+ங்காவில் இடம் உள்ள இடங்களில் அம்மா உடற்பயிற்சி கூடம் ஏற்படுத்தப்பட உள்ளது. கிராம ஊராட்சிகளினால் பராமரிக்கப்படுகிறது.

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2017-18 :
சட்டமன்ற உறுப்பினர் தொகுதிகளில் தேவையான அடிப்படை உள்கட்டமைப்பு பணிகளை உடனடியாக கண்டறிந்து அதனை செயல்படுத்துவதற்காக தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினர் தோகுதி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் தனது சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் தேவையான கட்டமைப்பு வசதிகளில் உள்ள இடைவெளிகளை கண்டறிந்து அப்பணியினை இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்திட பரிந்துரை செய்திடுவார்கள். இத்திட்டம் ஊரகம் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. சட்மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு ஆண்டுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி ரூ.1.75 கோடி தொகையானது 2011-12ஆம் ஆண்டு முதல் ரூ.2.00 கோடி தொகையாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு நிதி ஒதுக்கீடான ரூ.2.00 கோடியில், கீழ்க்காணும் முன்னுாிமை பணிகளை கட்டாயமாக எடுத்துச் செய்ய ரூ.1.10 கோடி “வரையறுக்கப்பட்ட கூறு நிதியாக” ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். மீதமுள்ள “வரையறுக்கப்படாத கூறு நிதியான” ரூ.90.00 இலட்சத்தில், தடை செய்யப்பட்ட பணிகளின் பட்டியலில் இடம் பெறாத பணிகள் அல்லது வரையறுக்கப்பட்ட கூறு நிதியில் அனுமதிக்கப்பட்ட பணிகளிலிருந்தும் அவர் தம் விருப்பத்தின் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர் தேர்வு செய்யலாம். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு :-

வரையறுக்கப்பட்ட கூறு நிதியான ரூ.1.10 கோடியில் எடுத்துச் செய்யக்கூடிய பணிகள் : (2017-18ஆம் ஆண்டில் குடிநீர் திட்டப் பணிகள் மட்டும்)
2016ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில், வடகிழக்கு பருவமழை வழக்கத்தைவிட 62 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளதன் காரணமாக முன்னெப்போதும் இல்லாத வகையில் வறட்சி நிலவுவதால், அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீா மட்டம் குறைந்ததோடு, குடிநீர் ஆதாரங்களில் நீர் இருப்பும் வறண்டு விட்டதால், சீரான குடிநீர் விநியோகம் மேற்கொள்ளும் போருட்டு அதிக எண்ணிக்கையிலான குடிநீர் பணிகள் மேற்கொள்ள வேண்டிய அவசர தேவை ஏற்பட்டுள்ளது. மேலும், குடிநீர் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பொருட்டு, குடிநீர் திட்டப் பணிகளை மேற்கொள்ள, வாய்ப்புள்ள அனைத்து நிதி ஆதாரங்களையும் ஒருங்கிணைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. அத்துடன் சட்டமன்ற உறுப்பினர்களும் தத்தமது தொகுதிகளில், குடிநீர் பணிகளுக்கு முன்னுரிமை அளித்திட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதற்கிணங்க, தற்போது நிலவும் வறட்சியை எதிர்கொள்ளும் பொருட்டு ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் “வரையறுக்கப்பட்ட கூறு நிதி”யாக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.110.00 இலட்சம் நிதியினை குடிநீர் திட்டப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த ஒதுக்கீட்டிற்கான முன்னுரிமை 2017-18ஆம் ஆண்டுக்கு மட்டும் பொருந்தும்.

வரையறுக்கப்படாத கூறு நிதியான ரூ.90.00 இலட்சத்தில் எடுத்து செய்யப்படக் கூடிய பணிகள்:
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் “எதிர்மறையான பட்டியல் / தடை செய்யப்பட்ட பணிகள்” தவிர பிற எந்தப் பணிகளையும் வரையறுக்கப்படாத கூறு நிதியின் கீழ் எடுத்துச் செய்யலாம். அதே போல் வரையறுக்கப்பட்ட கூறு நிதியில் எடுத்துச் செய்யப்படக் கூடிய பணிகளையும் வரையறுக்கப்படாத கூறு நிதியான ரூ.90.00 இலட்சத்தில் இருந்து மேற்கொள்ளலாம். பயணிகள் நிழற்குடை அமைப்பது இக்கூறில் எடுத்துச் செய்திட அனுமதிக்கப்படுகின்றது.

முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் 2017-18:
இத்திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள் ::
ஊரகப் பகுதிகளில் வாழும் ஏழை மக்கள் அனைவரும் சூாிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியானவர்கள்
சூரிய ஒளி முகப்புப் பலகை மற்றும் விளக்குகள் வழங்குதல், நிறுவுதல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றை நெறிமுறைப்படுத்தப்பட்ட நடைமுறைகளின்படி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைகளின் திட்ட இயக்குநர்களால் செயல்படுத்தப்படும். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் தலைமைச் செயலருடன் கலந்தாலோசித்து சூரிய மின்சக்தி விளக்குகள் பொருத்துவதை செயல்படுத்துவதற்கு தேவையான அறிவுரைகளை வழங்குவதற்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநர் அவர்கள் தகுதியானவர் ஆவார்
ஒவ்வொரு வீடும் 300 சதுர அடி பரப்பளவில், ரூ.2.10 லட்சம் அலகுத் தொகையில் மாநில அரசின் முழுமையான நிதி உதவியுடன் கட்டப்படுகிறது
ஒவ்வொரு வீடும், வசிக்கும் அறை, படுக்கை அறை, சமையல் அறை, கழிப்பறை மற்றும் தாழ்வாரம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இவை தவிர மழைநீர் சேகரிப்பு அமைப்பும் கொண்டிருக்கும்
ஒவ்வொரு வீட்டிலும் சூரிய ஒளி சக்தியில் எரியும் 5 ஒளி உமிழும் இருமுனையை (LED) விளக்குகள் அமைக்கப்படும். இவை படுக்கை அறை, சமையல் அறை, கழிப்பறை மற்றும் தாழ்வாரம் ஆகிய பகுதிகளில் தலா ஒரு விளக்கு வீதம் அமைக்கப்படும். பயனாளிகளின் விருப்பத்தின்படி தமிழ்நாடு மின்சார வாரியத்திலிருந்து மீட்டர் அளவீடுடன் கூடிய மின் இணைப்பு பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது
ஒரு வீட்டிற்கான அலகுத் தொகையான ரூ.2.10 லட்சத்தில், ரூ.1.80 லட்சம் கட்டுமானத்திற்கு ஒதுக்கப்பட்டு, சூரிய சக்தி விளக்குகள் அமைப்பதற்கான நிதி தேவைக்கேற்ப ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநர் அவர்களால் விடுவிக்கப்படும்
வீடுகள் கட்டும் பணி மற்றும் சூரிய சக்தி விளக்குகள் அமைக்கும் பணி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையால் செயல்படுத்தப்படும்
பசுமை வீடுகள், பயனாளிகளின் குடியிருப்பு அமைந்துள்ள இடம் அல்லது கிராம ஊராட்சியின் பிற பகுதியில் அமைந்துள்ள பயனாளிக்கு சொந்தமான இடங்களில் கட்டப்பட வேண்டும். மேலும், இத்திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்படுவதற்கென நில எடுப்புகள் ஏதும் செய்யப்படமாட்டாது. வீட்டுமனைப்பட்டா உள்ளவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியானவர்கள் ஆவர்
பயனாளிகளுக்கான தகுதிகள் :
ஒவ்வொரு பயனாளியும் கிராம ஊராட்சிக்குள்ளேயே வசிக்க வேண்டும்
கிராம ஊராட்சியில் வறுமை கோட்டிற்குக் கீழ் நிரந்தர காத்திருப்போர் பட்டியலில் இடம் பெற்று இருக்க வேண்டும்
300 சதுர அடிக்கு குறைவில்லாத இடத்தினை உடையவராக இருக்க வேண்டும்
குடும்ப தலைவர் பெயாரிலோ அல்லது வீட்டிலுள்ள ஏதாவது உறுப்பினர் பெயரிலோ இடம் / வீட்டிற்கான தெளிவான பட்டாவினை வைத்திருக்க வேண்டும்
அந்த கிராமத்திலோ அல்லது வேறெங்கிலோ பக்கா கான்கிரீட் வீடு உடையவராக இருக்க கூடாது
அரசின் வேறெந்த வீட்டு உதவி திட்டத்தின் கீழ் பயனடைந்தவராக இருத்தல் கூடாது
பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் (PMAY(Gramin)):
மத்திய அரசின் “அனைவருக்கும் 2022ம் ஆண்டுக்குள் வீடு“ என்ற குறிக்கோளை முன்வைத்து மத்திய கேபினட் அமைச்சகம் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் (கி) Pradhan Mantri Awaas Yojana (Gramin)-க்கு 23.03.2016 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பட்டியலில் அல்லாமல் மக்கள் தொகை அடிப்படையில், பயனாளிகள் சமூக பொருளாதார ஜாதிவாரியான கணக்கெடுப்பு (Socio Economic Caste Census) மூலமாக அடையாளம் காணப்பட்டு கிராம சபா கூட்ட தீா்மானம் நிறைவேற்றப்பட்டு தகுதியான நபர்கள் PMAY(G) திட்டத்திற்கு பயனாளிகளாக தேர்வு செய்தல் வேண்டும்.

தாழ்த்தப்பட்டோர் (SC), பழங்குடியினர் (ST), சிறுபான்மையினர்(Minority) மற்றும் இதர பிரிவினர் (Others) கிராம ஊராட்சி அளவில் தனியாக பட்டியல் தயார் செய்யப்பட வேண்டும்.
கீழ்க்கண்ட நபர்கள் இத்திட்டத்தின் பயனாளிகள் ஆவதற்கு முன்னுரிமை பெறுகின்றனர்

இருப்பிடம் இல்லாதவர்கள்
ஆதரவற்ற நிலையில் உள்ளவர்கள்
துப்புரவு பணியாளர்கள்
ஆதி திராவிட மலை ஐாதியினர்
கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டவர்கள்
சமூக பொருளாதார அடிப்படையில் முன்னுரிமை :-

குடும்ப தம்பதியருக்கு ஆதரவாக 16 வயது முதல் 59 வயது வரையிலான நபர்கள் இல்லாது இருத்தல்
பெண் குடும்பத்தலைவியாக உள்ள குடும்பத்தில் ஆதரவாக 16 வயது முதல் 59 வயது வரையிலான நபர்கள் இல்லாது இருத்தல்
25 வயதுக்கு மேல் கல்வியறிவு அற்ற நபர்கள் உள்ள குடும்பத்தினர்
ஊனமுற்றவர்கள் அல்லது உடல் முழுவதும் இயங்க இயலாத நிலையில் உள்ள நபர்கள்
நிலமற்ற கூலி வேலை செய்பவர்கள்
மேலும், கீழ்க்கண்ட நபர்களுக்கு முன்னுரிமை வழங்கிட வேண்டும்

விதவைகள் மற்றும் பாதுகாப்பு / படைப்பிரிவு / காவல் துறையில் உயிரிழந்த குடும்பத்தினர்
தொழுநோய் அல்லது புற்று நோய் அல்லது HIV பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்
ஒரு பெண் குழந்தையுடன் மட்டும் வசிக்கும் குடும்பத்தினர்
வன உரிமைச் சட்டத்தால் பயன்பெறும் குடும்பத்தினர்
திருநங்கைகள்
பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் வீடுகளுக்கான அளவு 210 சதுர அடியிலிருந்து 269 சதுர அடியாக உயா்த்தப்பட்டுள்ளது.

நிதி விபரம்:
மத்திய அரசின் பங்குத் தொகை (60%)
Rs.72,000/-
மாநில அரசின் பங்குத் தொகை (40%)
Rs.48,000/-
மத்திய அரசினால் நிர்ணயம் செய்யப்பட்ட ஒரு வீட்டிற்கான தொகை
Rs.1,20,000/-
கூரைமட்ட கான்கிரீட் நிலைக்கு தமிழ்நாடு அரசால் தற்போது வழங்கப்படும் தொகை
Rs.50,000/-
தமிழ்நாட்டில் ஒரு வீட்டிற்கு அனுமதிக்கப்படும் மொத்த தொகை
1,70,000/-
தன்னிறைவு திட்டம் – 2017-18:
முன்னுரை:
சமுதாய சொத்துக்களை திட்டமிட்டு உருவாக்குவதற்கும், நிதியளிப்பதற்கும் அவற்றின் நிலைப்புத் தன்மைகளை உறுதி செய்வதற்கும் பொது மக்களின் பங்கேற்பு அவசியமானதாகும். பொது மக்களின் சுய சார்பு தன்மையை ஊக்குவிப்பதற்கும், மேன்மைப்படுத்துவதற்கும், சமுதாய உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி பராமாிப்பதில் அவர்களின் பங்களிப்பை அதிகாித்து அதன் மூலம் தன்னிறைவு பெறச் செய்யவும் அரசு தன்னிறைவு திட்டத்தினை 2011-12ஆம் ஆண்டு முதல் செயல்படுத்துகிறது. இந்த வகையான பொது மக்கள் பங்கேற்பு அணுகுமுறையின்படி, பொது மக்கள் பங்கேற்பு மற்றும் அரசு நிதி உதவியுடன் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் சமுதாயத்தின் தேவைகள் “தன்னிறைவு“ அடைவதற்கு வழிவகை செய்கிறது.

தன்னிறைவு திட்டம் ஊரக மற்றும் நகா்ப்புற பகுதிகளில் செயல்படுத்தப்படும்.

பொது மக்கள் பங்களிப்பு:
குறைந்தபட்ச பொதுமக்கள் பங்குத் தொகை பணிக்கான மதிப்பீட்டுத் தொகையை மூன்றில் ஒரு பங்கு ஆகும். மதிப்பீட்டுத் தொகையில் 50 சதவீதம் பொது மக்கள் பங்குத் தொகையாக செலுத்தப்படுமாயின் பங்குத் தொகை செலுத்தியவர்கள் மூலமாகவோ அல்லது அவர்கள் பரிந்துரை செய்யும் நிறுவனங்கள் மூலமாகவோ பணியினை மேற்கொள்ளலாம். ஆனால் பொதுப்பணித்துறை மற்றும் பேரூராட்சி குளங்கள் தூர்வாரும் பணிகளுக்கான இனங்களில் பொதுமக்கள் தொகை 50 சதவீதம் அல்லது அதற்கு மேல் செலுத்தப்பட்டாலும் பணி ஒப்பந்த முறையிலே மேற்கொள்ளப்படும்.

தன்னிறைவு திட்டத்தின் கீழ் பணிகளை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள்:
எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய பணியினைக் குறி்ப்பிட்டு பொது மக்களின் பங்களிப்பான மூன்றில் ஒரு பங்கு தொகை அல்லது 50 சதவீத தொகையை வழங்க சம்மதம் தெரிவித்து விண்ணப்ப படிவம் ஒன்று கோரிக்கை வடிவில் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கொடுக்கப்பட வேண்டும்
மாவட்ட ஆட்சித்தலைவர், மேற்கொள்ளப்பட வேண்டிய பணியின் அத்தியாவசியத் தேவை மற்றும் அதனை நடைமுறைப்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து திட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி உறுதி செய்வார். அவ்விதிமுறைகள் திருப்தி அளிக்கும் பட்சத்தில் திட்டப் பணியினை மேற்கொள்ளவிருக்கும் முகமையிடம் விளக்கமான மதிப்பீட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் கோருவார். அனுமதி வழங்க ஏதுவாக விண்ணப்பதாரர் செலுத்த வேண்டிய உரிய தொகைக்கான கேட்பு வரைவோலையை மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநரிடம் செலுத்த வேண்டும்
தன்னிறைவு திட்டத்தின் கீழ் எடுத்துச் செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்ட பணிகளின் பட்டியல்:
அரசு பள்ளிகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், கள்ளர் சீரமைப்பு பள்ளிகள், அரசுக் கல்லூரிகள் மற்றும் அரசு விடுதிகளுக்கு கட்டடங்கள், ஆய்வகங்கள், கழிவறைகள் கட்டுதல், மிதி வண்டி நிறுத்துமிடம் மற்றும் சுற்றுச்சுவர் / சுற்று வேலி அமைத்தல்
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள், துணை மையங்கள், கால்நடை மருந்தகங்கள், கால்நடை வளா்ப்பு மையங்கள் மற்றும் நூலகங்கள் ஆகியவைகளுக்கு கட்டடங்கள் கட்டுதல் மற்றும் சுற்றுச்சுவர் / சுற்று வேலி அமைத்தல். தமிழ்நாடு இஸ்லாமிய அறக்கட்டளைக்குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட பொது இஸ்லாமிய அறக்கட்டளைக்கு (Wakf) சொந்தமான இடுகாடுகள் உட்பட இடுகாடுகளுக்கு பொது வசதிகள் மற்றும் சுற்சுச்சுவர் அமைத்தல் பணிகளையும் எடுத்துக்கொள்ளலாம்
ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் நூலகங்கள் கட்டுதல் மற்றும் ஊரக மற்றும் நகா்ப்புற பகுதிகளில் சத்துணவு மையங்கள், அங்கன்வாடிகள், பள்ளி சமையல் கூடங்கள் மற்றும் பொது விநியோகக் கடைகள் ஆகியவைகளுக்கு கட்டடங்கள் கட்டுதல். நூலகங்கள் கட்டுமானப் பணிக்கு எடுத்துக்கொள்ளும் பொழுது புத்தகங்கள் வாங்குவதற்கு போதுமான நிதி பங்களிப்பு செய்யப்பட்டுள்ளதா என்பதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்
ஊரக மற்றும் நகா்ப்புற பகுதிகளில் சமுதாய கட்டடங்கள், குடிநீர் வழங்குதல், சிமெண்ட் கான்கிரீட் சாலைகள் மற்றும் கதிரடிக்கும் களங்கள் போன்ற சமுதாய சொத்துக்களை உருவாக்குதல்
அனைத்து சமுதாய சொத்துக்களையும் பராமாித்தல், ஒருங்கிணைந்த மகளிர் மற்றும் ஆண்கள் சுகாதார வளாகத்தினை பராமாிக்கும் பணிக்கு முன்னுாிமை அளிக்கப்பட வேண்டும்
ஆண்கள் மற்றும் மகளிருக்கென ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் கட்டுதல்
பாலங்கள், சிறிய பாலங்கள் கட்டுதல், சரளை / கப்பிச் சாலகளை தார் சாலைகளாக தரம் உயா்த்துதல், பழுதடைந்த தார்ச்சாலைகளை புதுப்பித்தல், தெருக்கள் மற்றும் சிறிய சந்துக்களை செங்கல் அல்லது கப்பி கற்கள் அல்லது சிமெண்ட் பலகை அல்லது சிமெண்ட் கான்கிரீட் கொண்டு சீரமைத்தல்
பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், சாலை திட்டு(Traffic Island) நீருற்று, தெரு விளக்குகள் (சூாிய சக்தி விளக்குகள் உட்பட) போன்றவற்றை உருவாக்குதல், மேம்படுத்துதல் மற்றும் பராமரித்தல்
அரசு பள்ளிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், நூலகங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிலுள்ள கட்டடங்களுக்கு தேவையான அறைகலன்கள், கணினிகள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றை வாங்குதல் பழைய கணினிகள் மற்றும் உபகரணங்கள் வாங்கக்கூடாது
திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை தொடர்பான அனைத்து வ